இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படத்தை தமிழகம் முழுக்க ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது.ஆண்டவன் கட்டளை படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் விஜய் நடித்த பைரவா படத்தை வாங்கியுள்ளது.விஜய் நடிப்பில் கடைசியாய் வெளியான தெறி படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. அதனாலோ என்னவோ விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பரதன் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும பைரவா படத்தின் மீது விநியோகஸ்தர்களின் பார்வை திரும்பியது. பைரவா படத்தை வாங்க பல பெரிய நிறுவனங்கள் போட்டியிட்டன.கடைசியில் ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.அதன் நிறுவனர் சரவணன் கேட்ட விலையில் திருப்தியடைந்து பைரவா படத்தை அவருக்கு கொடுத்துள்ளனர்.
விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பைராவா படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே பாக்கி உள்ளன.இன்னும் ஓரிரு வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகளும் முடிந்து விடுமாம்!பைரவா படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்னதாகவே பைரவாவின் தமிழக விநியோக உரிமையை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.இன்னொரு பக்கம் ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் மிகப்பெரிய நிறுவனமாக உயர்ந்துள்ளது. பைரவா படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக போகன், கட்டப்பாவ காணோம் ஆகிய படங்களை வெளியிட உள்ளது - ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்.