தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப் போக வாய்ப்புள்ளது. இப்படத்தில் இடம் பெற்று சூப்பர் ஹிட்டான பாடலின் ஆரம்பத்தை எந்த நேரத்தில் தள்ளிப் போகாதே... என எழுதினார்களோ தெரியவில்லை. எதிர்பார்க்க வைத்து, எதிர்பார்க்க வைத்து படத்தின் வெளியீட்டையும் தள்ளிக் கொண்டே போகிறார்கள். ஆகஸ்ட் வெளியீடு, செப்டம்பர் 9 வெளியீடு, செப்டம்பர் 30, அக்டோபர் 7 என பல தேதிகள் குறிக்கப்பட்டு படம் தள்ளிக் கொண்டே வருகிறது.
இதற்கிடையில் அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு ரீமேக்கையும் ஒரே நேரத்தில் வெளியிட முடியாத சிக்கல். இப்படத்தின் தெலுங்கு ஹீரோவான நாக சைதன்யா நடித்த பிரேமம் படம் அக்டோபர் 7 வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் டிரைலர் வெளியான பிறகு மலையாள பிரேமம் படத்துடன் கிண்டல் செய்வதும் குறைந்துவிட்டதால், பிரேமம் தெலுங்கு ரீமேக்கிற்கு இப்போது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதனால் அன்றைய தேதியில் அச்சம் என்பது மடமையடா தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாக வாய்ப்பேயில்லை என்றாகிவிட்டது. அந்த தேதியும் போச்சே என கௌதம் ரசிகர்கள், சிம்பு ரசிகர்கள், ரகுமான் ரசிகர்கள் வருத்தமடைந்தனர். சரி, தீபாவளிக்காவது படத்தை வெளியிடலாம் என நினைத்தால் ஏற்கெனவே பல படங்கள் அன்றைய தேதியில் வெளியாகத் தயாராகி வருகின்றன. தியேட்டர் கிடைக்க வேண்டும், தெலுங்கு ரிலீசை சரி செய்ய வேண்டும் என பிரச்சனைகள் நீள்வதைப் பார்த்தால் தீபாவளி கழித்துத்தான் படம் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
அச்சம் என்பது மடமையடா வெளியீடு இப்படி, அச்சச்சசோ....என உச் கொட்ட வைத்து தவிக்க வைக்கிறதே. சீக்கிரம் சரி பண்ணுங்கப்பா...