Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஓய்வு அறிவித்த ‛ஞான கான சரஸ்வதி - எஸ்.ஜானகி ஒரு பார்வை...!!

23 செப், 2016 - 12:15 IST
எழுத்தின் அளவு:
S-Janaki-announces-retirement

தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை தன் தேன் குரலால் பாடி ரசிகர்களை மகிழ்வித்தவர் எஸ்.ஜானகி. 1957-ம் ஆண்டு தனது தேன் குரலை பாடல் வாயிலாக இந்த திரையுலகத்திற்கு தந்த ஜானகி, அன்றிலிருந்து கடந்த 60 ஆண்டுகளாக ஒரு ஞான குயிலாகவே பாடிப் பறந்தார். ஆனால் இப்போது தன் வயதை காரணம் காட்டி இனி தான் பாடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். ஜானகி கடந்து வந்த சாதனை பயணத்தை சற்றே திரும்பி பார்க்கலாம்...


ஜானகி தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் 1938ம் ஆண்டு ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்தார். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். நாதஸ்வர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது 9 வயது. பாடகியாகும் ஆசையில் சென்னை வந்த ஜானகி, 1956-ல் அகில இந்திய வானொலி நடத்திய பாட்டுப் போட்டியில் 2-ம் பரிசு பெற்றார். இதைத் தொடர்ந்து ஏவி.எம். ஸ்டுடியோவில் மாத சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக நியமனம் பெற்றார்.


திரைப்பயணம் : 1957ம் ஆண்டு விதியின் விளையாட்டு படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் எஸ்.ஜானகி. "பெண் என் ஆசை பாழானது..." என்பதுதான் அவர் பாடிய முதல் பாட்டு. ஆனால் அந்தப்படம் வெளிவரவில்லை. அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. "எம்எல்ஏ" என்ற பட்டத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார். 1957-ம் ஆண்டு ‛‛மகதல நாட்டு மேரி'' என்ற படத்தில், ஆர்.பார்த்தசாரதி இசையமைப்பில் ‛‛கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை...'' என்ற பாட்டு பாடியிருக்கிறார். இதுதான் இவரது குரலில் வெளிவந்த முதல் தமிழ் பாடல். இதைத்தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்பு கிட்டியது.


முதல் ஆண்டிலேயே 100 பாடல் : அறிமுகமான முதல் ஆண்டிலேயே 6 மொழிகளில் 100 பாடல்களைப் பாடி சாதனை படைத்தார். கொஞ்சும் சலங்கை திரைப்படத்துக்காக பாடிய சிங்கார வேலனே பாடல் இவரது வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இசைத்தட்டு விற்பனையிலும் இது சாதனை படைத்தது. அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்து பாடியுள்ளார்.


பணியாற்றாத இசையமைப்பாளர்களே இல்லை : ஜானகியின் குரலை பதிவு செய்யாத இசையமைப்பாளர்களே கிடையாது எனும் அளவுக்கு அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறார். ஜி.ராமநாதன், டி.சலபதிராவ், டிஆர்.பாப்பா, ஆர்.சுதர்சனம், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா, ஏஆர்.ரஹ்மான், தேவா ஆகியோருடன் இன்றைய தலைமுறை இசையமைப்பாளரான அனிருத் வரை பணியாற்றியுள்ளார்.


திருப்புமுனை தந்த இளையராஜா : 60-களில் ஏராளமான முத்தாய்ப்பான பாடல்களை பாடியிருந்தாலும் இவருக்கு திரையிசை பயணத்தில் இசை ராணியாக வலம் வர தொடங்கியது என்றால் அது இளையராஜாவின் வருகைக்கு பின்னர் தான். குறிப்பாக அன்னக்கிளியில் நான்கு பெண் குரல்கள் ஒலிக்கும் பாடல்களில் 3 ஜானகிக்கும், 1 பாடல் சுசீலாவுக்கும் அளித்தார் இளையராஜா. அதன்பின்னர் இளையராஜா-ஜானகி கூட்டணியில் ஆயிரக்கணக்கான இதமான ராகங்கள் வெளிவந்தன.


தனி முத்திரை பதித்த இளையராஜா-எஸ்பிபி-ஜானகி கூட்டணி : இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.ஜானகி கூட்டணி தென்னிந்திய இசைத் துறையில் தனி முத்திரை பதித்தது. பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடக்கூடியவர்.


48 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார் : குழந்தைக் குரலில் பாடுவதிலும் வல்லவர். திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என சுமார் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.


17 மொழிகளில் பாடியவர் : தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, கொங்கணி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஜப்பான், ஜெர்மனி, சீனா, மலேயா, உருது, பஞ்சாபி, குஜராத்தி ஆகிய 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி எஸ்.ஜானகிதான்.


இசையமைப்பாளரும் கூட... : தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.


குரலில் நடிப்பை வெளிப்படுத்தியவர் : ஹீரோயின் என்று இல்லாமல் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை எப்படிப்பட்டவரின் குரலில் பாடி அசத்த கூடியவர் ஜானகி.


4 முறை தேசிய விருது : சிறந்த பாடகிக்கான தேசிய விருது 4 முறையும்(தமிழில் இரண்டு முறையும், (‛பதினாறு வயதினிலே ‛‛செந்தூரப்பூவே... பாடல், ‛தேவர் மகன், ‛‛இஞ்சி இடுப்பழகா... பாடல்), தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஒரு முறையும்), கேரள அரசு விருது 14 முறையும், ஆந்திர அரசு விருது 10 முறையும், தமிழக அரசு விருது 7 முறையும் பெற்றவர். இதுதவிர ஏகப்பட்ட பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.


பத்மபூஷணை நிராகரித்தவர் : ஜானகியின் கலைச்சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. தொடர்ந்து 2013-ல் மத்திய அரசு, பத்மபூஷண் விருது அறிவித்தது. ஆனால் தனக்கு பத்மபூஷண் விருது மிகவும் தாமதமாக கிடைத்தது என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார்.


ஞான கான சரஸ்வதி பட்டம் : 1992 ஆம் ஆண்டில் ஜானகி இலங்கை சென்றிருந்த போது அவருக்கு ‛ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.


எஸ்.ஜானகி, ராம் பிரசாத் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அவர் இறந்துவிட்டார். இவருக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார். இவர் சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.


எஸ்.ஜானகி பாடிய பிரபலமான தனி பாடல்கள் இங்கே...


01. செந்தூர பூவே...( படம் : 16 வயதினிலே, இசை - இளையராஜா)


02. தூக்கமும் கண்களை... (படம் : ஆலய மணி, இசை - விஸ்வநாதன் ராமமூர்த்தி)


03. என்ன பாட சொல்லாத... (படம் : ஆண் பாவம், இசை - இளையராஜா)


04. விளக்கு வைப்போம்... (படம் : ஆத்மா, இசை - இளையராஜா)


05. நதியோரம்... (படம் : ஆவாரம்பூ, இசை - இளையராஜா)


06. வெண்மேகமே...(படம் : ஆயிரம் ஜென்மங்கள், இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்)


07. மாதா உன் கோயிலில்...( படம் : அச்சாணி, இசை - இளையராஜா)


08. வா ராஜா வந்து பாரு...(படம் : அடுத்த வாரிசு, இசை - இளையராஜா)


09. ஒரு பூங்காவனம்...(படம் : அக்னிநட்சத்திரம், இசை - இளையராஜா)


10. ரோஜா பூ ஆடி வந்தது...(படம் : அக்னி நட்சத்திரம், இசை - இளையராஜா)


11. புத்தம் புது காலை...(படம் : அலைகள் ஓய்வதில்லை, இசை - இளையராஜா)


12. கனவோடு எங்கும்...(படம் : அன்பே ஓடி வா, இசை - இளையராஜா)


13. நல்ல நேரம் நேரம்...(படம் : அந்த ஒரு நிமிடம், இசை - இளையராஜா)


14. இரவு நிலவு உலகை ரசிக்க...(படம் : அஞ்சலி, இசை - இளையராஜா)


15. மச்சான பாத்தீங்களா...(படம் : அன்னக்கிளி, இசை - இளையராஜா)


16. சுத்த சம்பா பச்ச நெல்லு...(படம் : அன்னக்கிளி, இசை - இளையராஜா)


17. அன்னக்கிளி உன்னத்தேடுதே...(படம் : அன்னக்கிளி, இசை - இளையராஜா)


18. ராசாவே உன்னை விடமாட்டேன்...(படம் : அரண்மனை கிளி, இசை - இளையராஜா)


19. வான் மதியே...(படம் : அரண்மனை கிளி, இசை - இளையராஜா)


20. தாரா அவர் வருவாரா...(படம் : அரசிளங்குமரி, இசை - ஜி.ராமநாதன்)


21. ஓல குருத்தோல காத்துல ஆடுது...(படம் : அறுவடை நாள், இசை - இளையராஜா)


22. வாழ்க்கை ஓடம் செல்ல...(படம் : அவள் அப்படித்தான், இசை - இளையராஜா)


23. கண்ணிலே என்ன உண்டு...(படம் : அவள் ஒரு தொடர்கதை, இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்)


24. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்...(படம் : அவளுக்கென்று ஒரு மனம், இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்)


25. இப்படி ஒரு தாலாட்டு...(படம் : அவர்கள், இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்)


26. காற்றுக்கென்ன வேலி...(படம் : அவர்கள், இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்)


27. இவள் ஒரு இளங்குருவி...(படம் : பிரம்மா, இசை - இளையராஜா)


28. பூட்டுக்கள் போட்டாலும்...(படம் : சத்ரியன், இசை - இளையராஜா)


29. என்ன மானமுள்ள பொண்ணு...(படம் : சின்ன பசங்க நாங்க, இசை - இளையராஜா)


30. அடடட மாமரக்குயிலே...(படம் : சின்ன குருவி, இசை - இளையராஜா)


31. கண்ணன் மனநிலையே...( படம் : தெய்வத்தின் தெய்வம், இசை - ஜி.ராமநாதன்)


32. ஓரே முறை உன் தரிசனம்...(படம் : என் ஜீவன் பாடுது, இசை - இளையராஜா)


33. தாயும் நானே தங்க இளமானே...(படம் : எங்கேயோ கேட்ட குரல், இசை - இளையராஜா)


34. தாலாட்டும் பூங்காற்று...(படம் : கோபுர வாசலிலே, இசை - இளையராஜா)


35. நான் வணங்குகிறேன்...(படம் : குரு, இசை - இளையராஜா)


36. எந்தன் கண்ணில்...(படம் : குரு, இசை - இளையராஜா)


37. பூ வானம்...(படம் : இன்று நீ நாளை நான், இசை - இளையராஜா)


38. எங்கே எங்கே...(படம் : இனிய உறவு பூத்தது, இசை - இளையராஜா)


39. காற்றில் எந்தன் கீதம்...(படம் : ஜானி, இசை - இளையராஜா)


40. நாதம் என் ஜீவனே...(படம் : காதல் ஓவியம், இசை - இளையராஜா)


41. எண்ணத்தில் ஏதோ...(படம் : கல்லுக்குள் ஈரம், இசை - இளையராஜா)


42. நினைத்தால் இனிக்கும்...(படம் : கல்யாண ராமன், இசை - இளையராஜா)


43. பட்டு வண்ண ரோசாவாம்... (படம் : கன்னி பருவத்திலே, இசை - இளையராஜா)


44. கண்டேன் எங்கும்... ( படம் : காற்றினிலே வரும் கீதம், இசை - இளையராஜா)


45. குயிலே கவிக்குயிலே...(படம் : கவிக்குயில், இசை - இளையராஜா)


46. வந்தது வந்தது...(படம் : கிளி பேச்சு கேட்க வா, இசை - இளையராஜா)


47. அன்பே வா அருகிலே...(படம் : கிளி பேச்சு கேட்க வா, இசை - இளையராஜா)


48. பூவரசம் பூ பூத்தாச்சு...( படம் : கிழக்கே போகும் ரயில், இசை - இளையராஜா)


49. சிங்கார வேலனே தேவா...(படம் : கொஞ்சும் சலங்கை, இசை - எஸ்.எம்.சுப்பைய நாயுடு)


50. சங்கீதமே... (படம் : கோயில் புறா, இசை - இளையராஜா)


51. பூங்காற்றே.... (படம்: குங்குமச்சிமிழ், இசை: இளையராஜா)


52. மந்திர புன்னகையோ... (படம்: மந்திர புன்னகை, இசை: இளையராஜா)


53. ஆசை அதிகம் வச்சு... (படம்: மறுபடியும், இசை: இளையராஜா)


54. ஊரு சனம் தூங்கியிருச்சு... (படம்: மெல்ல திறந்தது கதவு, இசை: இளையராஜா, எம்எஸ்.விஸ்வநாதன்)


55. சொல்லாயா வாய் திறந்து... (படம்: மோகமுள், இசை: இளையராஜா)


56. பொன்மேனி உருகுதே... (படம்: மூன்றாம்பிறை, இசை: இளையராஜா)


57. சின்ன சின்ன வண்ண குயில்... (படம்: மெளனராகம், இசை: இளையராஜா)


58. ஓஹோ மேகம் வந்ததே... (படம்: மெளனராகம், இசை: இளையராஜா)


59. ராசாவே உன்ன நம்பி... (படம்: முதல் மரியாதை, இசை: இளையராஜா)


60. எந்த பூவிலும் வாசம் உண்டு... (படம்: முரட்டுக்காளை, இசை: இளையராஜா)


61. பாடவா உன் பாடலை... (படம்: நான் பாடும் பாடல், இசை: இளையராஜா)


62. பிள்ளை நிலா இரண்டும்... (படம்: நீங்கள் கேட்டவை, இசை: இளையராஜா)


63. எடுத்து வச்ச பாலும்... (படம்: நினைவே ஒரு சங்கீதம், இசை: இளையராஜா)


64. பகலில் ஒரு நிலாவினை... (படம்: நினைவே ஒரு சங்கீதம், இசை: இளையராஜா)


65. தூரத்தில் நான் கண்ட... (படம்: நிழல்கள், இசை: இளையராஜா)


66. ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி... (படம்: பாசம், இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி)


67. வைதேகி ராமன் கை சேரும்... (படம்: பகல் நிலவு, இசை: இளையராஜா)


68. பிள்ளை செல்வமே... (படம்: பேசும் தெய்வம், இசை: கேவி மகாதேவன்)


69. ராஜா மகள்... (படம்: பிள்ளை நிலா, இசை: இளையராஜா)


70. ஆனந்தம் ஆனந்தம் நீ... (படம்: பூட்டாத பூட்டுக்கள், இசை: இளையராஜா)


71. நிலவுக்கு தாலாட்டு... (படம்: புதுமனிதன், இசை: தேவா)


72. கருத்த மச்சான்.... (படம்: புது நெல்லு புது நாத்து, இசை: இளையராஜா)


73. ஆணையிட்டேன் நெருங்காதே... (படம்: புன்னகை, இசை: எம்எஸ் விஸ்வநாதன்)


74. வசந்தம் ஆடி வர... (படம்: ரயில் பயணங்களில், இசை: டி.ராஜேந்தர்)


75. உனக்காகவே நான் உயிர்... (படம்: ரசிகன் ஒரு ரசிகை, இசை: ரவீந்திரன்)


76. ஏழிசை கீதமே... (படம்: ரசிகன் ஒரு ரசிகை, இசை: ரவீந்திரன்)


77. கண்ணன் வந்து பாடுகின்றான்... (படம்: ரெட்டை வால் குருவி, இசை: இளையராஜா)


78. மழை வருவது மயிலுக்கு... (படம்: ரிஷிமூலம், இசை: எம்எஸ் விஸ்வநாதன்)


79. அத்திமர பூவிது... (படம்: சாதனை, இசை: இளையராஜா)


80. தண்ணீர் குடம் கொண்டு... (படம்: சக்கரைத்தேவன், இசை: இளையராஜா)


81. ஓம் நமச்சிவாயா... (படம்: சலங்கை ஒலி, இசை: இளையராஜா)


82. கனவுலகே ஊர் உலகம் எங்கே... (படம்: சாமந்திப்பூ, இசை: மலேசியா வாசுதேவன்)


83. குயிலு குயிலு இது காட்டு... (படம்: செல்வி, இசை: இளையராஜா)


84. தூது செல்வதாரடி... (படம்: சிங்கார வேலன், இசை: இளையராஜா)


85. நான் தேவதை... (படம்: சூலம், இசை: இளையராஜா)


86. முத்துமணி கண்ணனுக்கு... (படம்: சுடரும் சூறாவளியும், இசை: எம்எஸ் விஸ்வநாதன்)


87. ராதைக்கேற்ற கண்ணனோ... (படம்: சுமை தாங்கி, இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி)


88. என் அன்னை செய்த பாவம்... (படம்: சுமை தாங்கி, இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி)


89. பூங்குருவி... (படம்: சுந்தரகாண்டம், இசை: தீபக்)


90. ஆசை நெஞ்சே நீ பாடு... (படம்: தாய் வீடு, இசை: பப்பி லகரி)


91. சின்ன தாய் அவள்... (படம்: தளபதி, இசை: இளையராஜா)


92. கல்யாண மேல சத்தம்... (படம்: தம்பிக்கு எந்த ஊரு, இசை: இளையராஜா)


93. கண்களுக்குள் உன்னை எழுது... (படம்: தந்துவிட்டேன் என்னை, இசை: இளையராஜா)


94. பூங்குயில் பொன்மாலையில்... (படம்: தழுவாத கைகள், இசை: இளையராஜா))


95. என்னங்க மாப்பிள்ளை... (படம்: தென்றலே என்னை தொடு, இசை: இளையராஜா)


96. ராதா அழைக்கிறாள்... (படம்: தெற்கத்தி கள்ளன், இசை: இளையராஜா)


97. அட ராமா நீ நம்ம கிட்டா... (படம்: தூங்காதே தம்பி தூங்காதே, இசை: இளையராஜா)


98. வசந்தகால கோலங்கள்... (படம்: தியாகம், இசை: இளையராஜா)


99. தேனே தென்பாண்டி மீனே... (படம்: உதயகீதம், இசை: இளையராஜா)


100. அழகு ஆயிரம்... (படம்: உல்லாச பறவைகள், இசை: இளையராஜா)



எஸ்.ஜானகி பாடுவதை நிறுத்திவிட்டாலும் அவர் பாடிய பாடல்கள் உலகில் காற்று உள்ளவரையும், மனிதனுக்கு காது உள்ள வரையும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் திண்ணம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in