தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் எல்லோரும் நடிக்கத் தயங்கும் எப்படிப்பட்ட கேரக்டரிலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன், என்று பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் கூறியுள்ளார். சினிமா பாரம்பரியமிக்க கபூர் குடும்பத்தில் பிறந்து, ஜொலிக்கும் நடிகையாக பாலிவுட்டை வலம் வருபவர் சோனம் கபூர். சினிமா அனுபவங்கள் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நான் மரங்களைச் சுற்றி காதல் பாட்டுப்பாடும் நடிகையாகவும் இருந்திருக்கிறேன். முதல் படத்திலேயே மேக்கப் இல்லாமல் நடித்தேன். படத்தின் இறுதியில் வயதான, தளர்ந்த மூதாட்டி போல தோன்றினேன். அது எந்தப் பெண்ணும் நடிக்கத் தயங்கும் கேரக்டர். மற்றவர்கள் நடிக்கத் தயங்கும் எப்படிப்பட்ட கேரக்டரிலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். அப்படிப்பட்ட வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்.
ஒரே விதமான உடைகள் அணிவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்திருக்கும் சோனம், நான் சிறு தொப்பையும், பெரிய பின்புறமும் கொண்ட பெண். இதனால் நான் மாடலிங் அழகி ஆக முடியாது என்பது எனக்குத் தெரியும். அதை மீறி நுழைந்தால் மாடலிங் உலகில் என்னை தேடித்தான் பிடிக்க வேண்டும். நான் என் உடலுக்கும், மனதுக்கும் ஏற்ற உடைகளையே அணிகிறேன். ஆனால் மக்கள் நான் அணிவதை வித்தியாசமாக பார்க்கிறார்கள். ஸ்டைலுக்காக புதிது புதிதாக எது எதையோ அணிகிறேன் என்றும் சொல்கிறார்கள், என்று கூறியிருக்கிறார்.