ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
பாலிவுட்டின் முன்னணி நடிகை வித்யாபாலன். ஹீரோக்களுக்கு இணையாக நடிக்கும் ஆற்றல் பெற்றவர். தேசிய விருது நடிகை, எப்படிப்பட்ட ரோலிலும் அசத்துபவர். தற்போது இவர், கஹானி 2 படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிய வித்யாபாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருக்க மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து டாக்டர் குழுவினர் அவருக்கு தடுப்பு மருந்து கொடுத்து உள்ளனர். மேலும் வீட்டில் 10 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே வித்யாபாலனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை அறிந்த சுகாதார அதிகாரிகள், வித்யாபாலன் வசித்து வந்த வீட்டில் ஆய்வு செய்தனர். அங்கு கொசு உற்பத்தியாகும்படி இருப்பதை கண்டறிந்து அதை உடனடியாக அகற்றினர். மேலும் கொசுக்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.