‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் இம்ரான் ஹாஷ்மியும் ஒருவர். முன்பு ஒருமுறை பேட்டி ஒன்றில் இம்ரான், தனது படத்தில் ஆலியாபட்டு உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆலியா, இம்ரானின் உறவினர் வழி சகோதரியாம். இதனிடையே இயக்குநர் ஒருவர் இம்ரானிடத்தில் கதை ஒன்றை கூறியிருக்கிறார், மேலும் அந்தப்படத்தில் ஆலியா நடிப்பதாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால் இம்ரான், ஆலியாவுடன் நடிக்க மறுத்து விட்டாதாக செய்திகள் வெளியாகின. ஏனென்றால் படத்தில் இம்ரான் மற்றும் ஆலியா நடிக்கும் காட்சிகள் காதல் காட்சிகளாக உள்ளதாம். எனவே இந்தப்படத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்று கூறுகிறார்கள்.