ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சர்ச்சைக்கு பெயர் போன பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியாகி பெற்றி படம் சர்க்கார் . இதைத் தொடர்ந்து சர்க்கார் 2 படத்தையும் ராம் கோபால் வர்மா இயக்கினார். இரண்டு படத்திலும் பிரபல முன்னணி நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர். தற்போது ராம் கோபால் வர்மா சர்க்கார் படத்தின் மூன்றாம் பாகமாக சர்க்கார் - 3 படத்தை இயக்க இருக்கிறார் .
சில தினங்களுக்கு முன் சர்க்கார் - 3 படத்தில் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது சர்க்கார் -3யில் யாமி கவுதம் நடிக்கிறாராம். சர்க்கார் - 3 படத்தின் கதையையும், யாமியின் ரோலையும் ராம்கோபால் யாமிடயிடம் கூறியிருக்கிறார். அதில் யாமிக்கு தன்னுடைய ரோல் பிடித்து இருந்ததால் உடன் ஓகே சொல்லியிருக்கிறார். மேலும் சர்க்கார் - 3யிலும் அமிதாப் பச்சன் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். ஆனால் அபிஷேக் பச்சனும் , ஐஸ்வர்யா ராயும் நடிக்கவில்லை. தற்போது யாமி கவுதம் காபில் படத்தில் நடித்து வருகின்றார். இதை முடித்ததும் சர்க்கார்-3யில் நடிக்க உள்ளார். சர்க்கார் -3 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.