பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டில் ஆக்ஷ்ன் ஸ்டார் என பெயர் எடுத்தவர் சன்னி தியோல், இப்போது இவரது வாரிசுகள் திரையுலகிற்கு வரும் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள். முன்புபோல் சினிமாவில் பிஸி நடிகராக இல்லாவிட்டாலும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். சிலமாதங்களுக்கு முன்னர் ‛கயால் ஒன்ஸ் அகைன்' எனும் படத்தில் நடித்தார். அடுத்தப்படியாக இயக்குநர் அஸ்வின் சவுத்ரியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
அப்பா-மகன் உறவை சொல்லும் விதமாக உருவாக உள்ள இப்படத்திற்கு தற்போது திரைக்கதை உருவாக்கும் பணி மும்முரமாய் நடந்து வருகிறது. படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகள் கிடையாது, உணர்வுப்பூர்மான காட்சிகள் மட்டுமே இருக்கும். சன்னி தியோலின் மகனாக இளம் நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. விரைவில் இளம் நடிகர் முடிவானதும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்கள்.