ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
பாலிவுட்டின் திறமை வாய்ந்த நடிகர்களில் நவாசுதீன் சித்திக்கும் ஒருவர். அவர், இப்போது தான் நடித்துள்ள பிரீக்கி அலி படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். இந்தப்படத்தில் நவாசுதீன் சித்திக், நடிகை எமி ஜாக்சன் உடன் ரொமான்ட்டிக் காட்சிகளில் எல்லாம் நடித்துள்ளார். தொடர்ந்து இதுபோன்ற ரொமான்ட்டிக் படங்களில் தனக்கு நடிக்க விருப்பம் என்று கூறியிருக்கிறார் நவாசுதீன்.
இதுப்பற்றி நவாசுதீன் கூறியிருப்பதாவது... ‛‛எமி ஜாக்சன் உடன் ரொமான்ட்டிக் காட்சிகளில் நடித்ததை எதற்காக வழக்கத்திற்கு மாறான ஒன்றாக பார்க்கிறார்கள் என்றே தெரியவில்லை. நான் என்ன நான்கு கைகள், மூன்று காதுகளுடன் வித்தியாசமாக அவருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தேன். மற்ற நடிகர்களை போன்று நானும் ரொமான்டிக் காட்சிகளில் நடித்திருக்கிறேன், அவ்வளவு தான். இதன்பிறகு தொடர்ந்து இன்னும் அதிகப்படியான ரொமான்ட்டிக் காட்சிகளில் நடிக்க ஆசை வந்துள்ளது'' என்று கூறியுள்ளார்.