‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கஜினி படத்தில் மெமரிலாஸ் உடையவராக சூர்யா நடித்தார். அதைத் தொடர்ந்து இப்போது சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் கத்திச்சண்டை படத்தில் மெமரிலாஸ் வேடத்தில் நடிக்கிறார் விஷால். இந்த படத்தில் மனோதத்துவ டாக்டர் புத்ரியாக நடிக்கிறார் வடிவேலு. விஷாலின் மெமரிலாஸை குணப்படுத்தும் டாக்டராக அவர் நடித்துள்ளார். அதனால் விஷாலுக்கு மருந்தில்லாத சில சிகிச்சைகளை கொடுப்பாராம் வடிவேலு.
அந்த வகையில், விஷாலை கடற்கரைக்கு அழைத்து சென்று ஒரு குதிரையில் சவாரி செய்ய வைப்பாராம் வடிவேலு. ஆனால் அவரை ஏற்றி விட்ட குதிரைக்கும் மெமரிலாஸ் என்பது அந்த குதிரை விஷாலுடன் வெகுதூரத்திற்கு அப்பால் ஓடிய பிறகுதான் தெரியுமாம். அதனால் அந்த குதிரை குறிப்பிட்ட தூரம் சென்றதும் திரும்பி வருவது கடினம் என்பதால் அதை துரத்திக்கொண்டு நீண்ட தூரம் சென்றுதான் குதிரையில் இருந்து விஷாலை இறக்குவாராம் வடிவேலு. இப்படி கத்திச் சண்டை படத்தில் மெமரிலாஸ் விஷாலை வைத்து நிறைய காமெடி காட்சிகள் செய்துள்ளாராம் வடிவேலு.