நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
செம கடுப்பில் இருக்கிறார் தீபிகா படுகோனே. 'பேஷன் டிசைனிங்' தொடர்பான, ஒரு பிரபல இணையதள பத்திரிகை, உலகில் மிக அதிக சம்பளம் பெறும், 10 நடிகையரின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இதில், முதலிடத்தை பிடித்தவர், பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனீபர் லாரன்ஸ். முதல், ஒன்பது இடங்களையும், மெலிசா மெகார்த்தி, ஸ்கார்லெட் அனிஸ்டன், ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற ஹாலிவுட் நடிகையர் தான் ஆக்கிரமித்துள்ளனர். 10வது இடத்தில், பீத்திகா படுகோனே என்ற நடிகையின் பெயர் இருந்தது. யார் இந்த பீத்திகா என, திரைப்பட ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டனர். கடைசியில் தான், தீபிகா என்பதற்கு பதிலாக, பீத்திகா என தவறுதலாக குறிப்பிடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையறிந்ததும், பயங்கர டென்ஷனாகி விட்டார் தீபிகா.
'எவ்வளவு முக்கியமான செய்தி இது; இதில் போய், என் பெயரை தவறுதலாக குறிப்பிட்டு விட்டனரே' என, வருத்தப்படுகிறார். 'ஹூ இஸ் பீத்திகா' என, சமூக வலைதளமான டுவிட்டரில், 'நெட்டிசன்கள்' இந்த விஷயத்தை கலாய்த்து, கமென்ட்டுகளை அள்ளி விட்டுள்ளனர்.