ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் நடித்த கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்தபோது தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. லைகா நிறுவனத்தின் அதிபர் சுபாஸ்கரன், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவின் கூட்டாளி என்று விமர்சனம் எழுந்தது. அதன் பிறகு ஒருவழியாக சர்ச்சைகள் அடங்கின.
இப்போது ரஜினி நடிக்கும் 2.0 படம் உட்பட பல படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம் 'பிச்சைக்காரன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆன்டனி நடித்து வரும் 'எமன்' படத்தை தயாரித்து வருகிறது. 'நான்' படப் புகழ் ஜீவா சங்கர் இயக்கி வரும் 'எமன்' படத்தில் இடம் பெறும் 'என் மேல கைய வச்சா காலி' என்று துவங்கும் பாடலை விஜய் ஆண்டனி இசை அமைத்து பாடியுள்ளார்.
விநாயக சதுர்த்தியன்று வெளியாகவிருக்கும் இந்த பாடலை வித்தியாசமான முறையில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதாவது, திருநெல்வேலியில் வருகிற 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் லைக்கா கோவை கிங்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இடையே பாடலை வெளியிடுகிறார்கள். கிரிக்கெட் போட்டி காண வரும் ரசிகர்களுக்கு இந்த பாடல் விருந்தாக அமையும் என்று நம்புகின்றனர் 'எமன்' படக்குழுவினர். நம்பிக்கைதானே வாழ்க்கை?