பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டில் 20 வருடத்திற்கு மேல் முன்னணியில் இருக்கும் ஹீரோ அமீர் கான். தற்போது இவர் "டங்கல்" என்ற படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அமீர் கானிடம் நீங்கள் ஏன் ஹாலிவுட்டு செல்லவில்லை என்று கேட்டனர்.
இதற்கு அமீர்கான் கூறியதாவது.... "எனக்கு ஹாலிவுட் செல்வதற்கு ஆசையில்லை. அந்த கலாச்சாரம் எனக்கு செட் ஆகாது. என் மனதிற்கு பிடித்த நல்ல கதை அம்சம் உடைய படத்தில் தான் நடிக்க ஆசை. ஹாலிவுட்டில் இருந்து நிறைய வாய்ப்புகள் வந்தது, ஆனால் அந்த படங்களின் கதை பிடிக்கவில்லை. 27 வருடமாக சினிமாவில் நடித்து வருகிறேன். எனக்கும், என் ரசிகர்களுக்கு நல்ல உறவு இருக்கிறது அதை கெடுத்து கொள்ள விரும்பவில்லை. என் ரசிகர்களை விட்டு செல்ல மனம் இல்லை. இங்கு உள்ளவர்கள் தான் என் மக்கள், அவர்களை விட்டு ஒருபோதும் செல்ல மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
மல்யுத்த வீரர் போகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் டங்கல் படம், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது.