Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

எப்படிப்பட்டவர் கணவராக வர வேண்டும்? - மனம் திறக்கிறார் சோனாக்ஷி சின்ஹா

31 ஆக, 2016 - 12:59 IST
எழுத்தின் அளவு:
Sonakshi-Sinha-says-about-future-Husband

நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் வாரிசு எனும் அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமாகி, ‛தபாங்' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. ஹாலிடே படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‛அகிரா' எனும் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் செப்., 2ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது....


அகிரா படத்தில் நடிக்க என்ன காரணம்?


ஒரு காரணம் அல்ல, ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. முதலில் இது ஏஆர் முருகதாஸ் படம். நிறைய சூப்பர் ஹிட்டான ஆக்ஷ்ன் படங்களை கொடுத்தவர். முதன்முறையாக அவர் பெண்களை மையப்படுத்தி படம் எடுத்துள்ளார். இதுவரை நான் நடித்திராத ஒரு ரோல், அதனால் அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி கொண்டேன். அதுமட்டுமல்ல படத்தின் கதை, என்னுடைய ரோல் எல்லாம் மிகவும் பிடித்திருந்தது. கூடவே சவாலாகவும் இருந்தது. அதனால் நடித்தேன்.


அகிரா எந்த மாதிரியான படம்?


அகிரா பொழுபோக்கான படம் மட்டுமல்ல பெண்களுக்கு நல்ல கருத்தை எடுத்து சொல்ல போகிற, பெண்களின் வலிமையை போற்றும் படமாக இருக்கும். அகிரா படம் மட்டுமல்ல, ஏஆர் முருகதாஸின் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்குடன் கூடிய சமூகத்தில் ஒரு நல்ல விஷயத்தை பிரதிபலிக்கும் படங்களாக இருக்கும். இந்தப்படத்தை பார்க்கும் போது பெண்கள் ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். அதற்கு நான் உதவியுள்ளேன் என்று எண்ணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.


ஒரு பெண்ணாக அகிரா படத்தில் ஆக்ஷ்ன் காட்சியில் நடிக்க எவ்வளவு சிரமம் இருந்தது?


ஆக்ஷ்ன் காட்சிகள் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கடினமான ஒன்று தான். அகிரா படத்தின் ஆக்ஷ்ன்களுக்காக நிறைய பயிற்சிகள் மேற்கொண்டேன். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தற்காப்பு கலைகள் பயின்றேன். இதுதவிர ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நிறைய பயிற்சி மேற்கொண்டேன். படப்பிடிப்பின்போது சில சமயம் அடிப்பட்டது, ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது தொடர்ந்து படங்களில் நடித்தேன். படத்தில் பார்க்கும்போது ஆக்ஷ்ன் காட்சிகள் சர்வசாதரணமாக தெரியும், ஆனால் நிஜத்தில் அதை கொண்டு வருவது மிகவும் சவாலான ஒன்று.


கிசுகிசுக்களை எப்படி எடுத்து கொள்வீர்கள்?


என்னைப்பற்றியும் நிறைய கிசுகிசுக்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அதையெல்லாம் நான் ஒரு பொருட்டாகவே கருதுவது கிடையாது. நான் முழுக்க முழுக்க என்னுடைய படங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். இது தான் நான் கிசுகிசுவை தவிர்ப்பதற்கான தாரக மந்திரம்.


எப்படிப்பட்டவரை திருமணம் செய்ய ஆசைப்படுகிறீர்கள்?


நகைச்சுவை உணர்வோடு கூடிய நல்ல அழகான, என்னை எப்போதும் சிரிக்க வைப்பவராக இருப்பவரை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். கூடவே என்னுடைய உயரத்திற்கும், எடைக்கும் ஏற்ற ஆண் மகனாகவும் இருக்க வேண்டும்.


உங்களின் அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க?


அகிரா படத்தை தொடர்ந்து ‛போர்ஸ் 2' படம் ரிலீஸாகிறது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 7-ம் தேதி ‛நூர்' படம் ரிலீஸாகிறது. இதுதவிர சில படங்களுக்கு கதை கேட்டு வருகிறேன். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இன்னொரு முக்கியமான விஷயம், எனக்கு என் அப்பாவுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, அப்படியொரு கதையை தேடி வருகிறேன், நல்ல கதை அமைந்தால் அப்பாவுடன் இணைந்து நடிப்பேன்.


இவ்வாறு சோனாக்ஷி சின்ஹா கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in