தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புதுமுக இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கும் படத்தில் நிவின் பாலி, நட்டி, ஷரத்தா தாஸ், லட்சுமிப்ரியா நடித்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இதன் படப்பிடிப்புகள் மணப்பாடு மற்றும் குற்றாலம் பகுதிகளில் நடந்து வருகிறது.
தற்போது இதில் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார். இதில் அவர் முதன் முறையாக கிறிஸ்தவ பாதிரியாராக நடிக்கிறார். அவரது மகனாக நிவின் பாலி நடிக்கிறார். "பிரகாஷ்ராஜ் கட்டுப்பாடு மிக்க கிறிஸ்தவராக இருக்கிறார். அவரது மகனோ எந்த கட்டுப்பாடும் இல்லாத ஜாலியான ஆள். இருவரும் சந்தித்து கொள்வது தேவாலய பிரார்த்தனையில் மட்டுமே, இந்த முரண்பாட்டில்தான் திரைக்கதை பயணிக்கிறது.
பிரகாஷ்ராஜ் சார் சிறந்த வில்லன், தந்தை, நண்பன் என விதவிதமான கேரக்டரில் நடித்துவிட்டார். இந்த பாதிரியார் கேரக்டர் அவரது கேரியரில் முக்கியமான கேரக்டராக இருக்கும்" என்கிறார் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன்.