பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிக்ஸ்பேக் ஹீரோவான ஆர்யா, பாலாவின் நான் கடவுள், அவன் இவன் படங்கள் தவிர மற்ற படங்களில் எல்லாம் சண்டை போட்டால்கூட சட்டையில் மண் ஒட்டாமல்தான் நடித்து வந்தார். அந்த அளவுக்கு ப்ளேபாய் ஹீரோவாக திகழ்ந்தார். ஆனால் தற்போது கடம்பன் படத்திற்காக பழங்குடியினத்தவராக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார் ஆர்யா. அதற்காக பாங்காங் காடு களில் பல மாதங்களாக யூனிட்டுடன் முகாமிட்டுள்ளார்.
மேலும், இதற்கு முன்பு தான் நடித்த படங்களுக்காக உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆர்யா, இந்த படத்திற்காக 90 கிலோ வரை உடல் எடையை அதிகப்படுத்தி பருமனான தோற்றத்திலும் நடிக்கிறார். ஆனால் இப்படி முதன்முறையாக அதிக ரிஸ்க் எடுத்து நடித்து வரும் ஆர்யா, கடம்பன் படத்திற்காக நடுகாட்டிற்குள் முகாமிட்டு, யானை கூட்டத்துடன் நடித்து வருகிறார். அப்படி நடிக்கும்போது அதே காட்டுக்குள் மேலும் பல மிருகங்களைப் பார்த்து கலவரமடைகிறதாம். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான மிரு கங்களை பார்க்க நேரும்போது தனக்குள் நிகழும் திகில் அனுபவங்களை தனது ஆத்மார்த்தமான கோலிவுட் நண்பர்களுக்கு போன் செய்து பகிர்ந்து வருகிறார் ஆர்யா.