பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உத்தர பிரதேசத்தை சேர்ந்த மாடல் அழகி பியா பாஜ்பாய். ஏ.எல்.விஜய்யின் முதல் படமான பொய் சொல்லப்போறோம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஏகன், கோவா, பலே பாண்டியா, கோ, சட்டம் ஒரு இருட்டரை, நெருங்கி வா முத்தமிடாதே உள்பட சில படங்களில் நடித்தார். மும்பை டெல்லி மும்பை' என்ற இந்திப் படம், எக்ஸ் பாஸ்ட் பிரசன்ட் என்ற ஆங்கில படம், மலையாளம், தெலுங்கு படங்கள் என ஒரு ரவுண்ட் அடித்தார். ஆனாலும் ஏனோ அவரால் முதல் வரிசைக்கு வரமுடியவில்லை.
தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் புரமோசனில் ஆடியிருக்கும் இவர், போட்டியில் வெற்றிபெறுபவர்களுடன் இணைந்து ஆட இருக்கிறார். "என்னோட ஆட வர்றது யாரு..." என்ற புரமோசன் பாடலுக்கு ஆடியுள்ளார். இது யூ டியூப்பில் டிரண்டாகி உள்ளது.
"டான்ஸ் என்றால் எனக்கு உயிர். சினிமாவா, சின்னத்திரையா என்ற வேறுபாடு என் நடனத்துக்கு இல்லை. நல்ல மேடை எங்கு கிடைத்தாலும் நடனம் ஆடுவேன். இப்போது இந்த மேடை கிடைத்திருக்கிறது. என் நடன திறமையை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் வாய்ப்பை ஏன் நழுவ விடவேண்டும்" என்கிறார் பியா.