பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'பிரேமம்' படம் தெலுங்கில் அதே பெயரில் நாக சைதன்யா, ஸ்ருதிஹாசன் நடிக்க ரீமேக் ஆகி முடிந்துள்ளது. அடுத்த மாதம் இந்தப் படம் வெளியாக உள்ளது. இதனிடையே, இந்தப் படத்தின் ஒரு நிமிடப் பாடல் காட்சி ஒன்றை யு டியூபில் வெளியிட்டார்கள். அவ்வளவுதான் மலையாள 'பிரேமம்' மலர் டீச்சர் ரசிகர்கள் கொதித்தெழுந்துவிட்டார்கள். கடந்த இரண்டு நாட்களாக தெலுங்கு 'பிரேமம்' மலர் டீச்சரை 'டிரோல்' செய்து பல மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.
பொதுவாக, சில காதல் திரைப்படங்கள் நம் மனதில் அப்படியே ஆழப் பதிந்துவிடும். தமிழ் ரசிகர்களும் வேற்று மொழிப் படங்களை அந்த அளவிற்கு ரசித்து அந்தப் படங்களின் ரசிகர்களாகவே என்றும் இருப்பார்கள். தெலுங்கில் 'மரோ சரித்ரா', ஹிந்தியில் 'ஏக் துஜே கேலியே', கன்னடத்தில் 'பருவ ராகம்' போன்ற சில படங்கள் நம் மனதை விட்டு அகலாத படங்களாக இருக்கும். அந்தப் படங்களின் வரிசையில் மலையாளத்திலிருந்து வெளிவந்த 'பிரேமம்' படமும் இடம் பெற்றிருந்தது.
இப்போது மலையாளத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவியுடன் தெலுங்கு மலர் டீச்சரான ஸ்ருதிஹாசனை ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கடும் விவாதம் நடந்து வருகிறது.
சாய் பல்லவியின் அழகிற்கும், யதார்த்த நடிப்பிற்கும் முன்னால் ஸ்ருதிஹாசன் வரவே முடியாது என அவர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். சாய் பல்லவியிடம் ஒரு அப்பாவித்தனமும், குழந்தைத்தனமும் இருந்தது அனைவரையும் கவர்ந்தது. அவர் 'பிரேமம் ' படத்தில் ஒரு புதிய முகமாகத் தெரிந்தார்.
ஆனால், ஸ்ருதிஹாசன் தெலுங்குப் படங்களிலேயே படு கிளாமராக மிகவும் கவர்ச்சியாக நடித்தவர். அவர் இப்போது மலர் டீச்சராக நடித்தால் எப்படி ஏற்றுக் கொள்வது. அவரிடம் எந்த அப்பாவித்தனமும், குழந்தைத்தனமும் ஏன் இளமையும் கூட இல்லை என்கிறார்கள் சாய் பல்லவியின் தீவிர ரசிகர்கள். ஒரு பாடல் வெளிவந்ததற்கே இவ்வளவு விவாதம் என்றால் படம் வெளியானால் இவர்களிடம் சிக்கி ஸ்ருதிஹாசன் என்ன ஆகப் போகிறாரோ....??.