பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நாகார்ஜூனாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தின் பஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. பக்தி படங்களை இயக்கி வெற்றி கண்ட கே. ராகவேந்திர ராவ் இயக்கும் ஓம் நமோ வெங்கடேஷாய திரைப்படம் பெருமாள் பக்தர் ஹாத்தி ராம் பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியது. இப்படத்தில் நாகார்ஜூனா பெருமாள் பக்தர் ஹாத்தி ராம் பாபா வேடத்தில் நடிக்கின்றார். அக்கதாபாத்திரத்தின் பஸ்ட் லுக் இன்று(ஆகஸ்ட் 29) வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு முன்னர் நாகார்ஜூனா நடித்துள்ள பக்தி படங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் இப்படமும் வெற்றி அடையும் என படக்குழுவினர் கூறுகின்றனர். அனுஷ்கா, ப்ரக்யா ஜெய்ஸ்வால் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் ஹிந்தி சீரியல் நடிகர் சௌரப் பெருமாள் வேடத்தில் நடிக்கின்றார்.