Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஸ்டீவன்பீல்பெர்க் டைரக்சனில் நடித்த மலையாள காமெடி நடிகர்..!

29 ஆக, 2016 - 10:28 IST
எழுத்தின் அளவு:
malayalam-comedy-actor--sasi-kalinga-in-the-direction-of-director-steven-spielberg

மலையாளத்தில் சின்னசின்ன ரோல்களில் சாதாரணமாக நடித்து வந்த ஒரு காமெடி நடிகரான சசிகலிங்கா என்பவர், ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார் என்பதும் அதைவிட இந்தப்படத்தில் நடிப்பதற்காக மலையாள சூப்பர்ஸ்டார்கள் தற்போது சம்பளமாக வாங்கும் தொகையை விட அதிகமான தொகையை இவருக்கு சம்பளமாக கொடுத்துள்ளார்கள் என்பதும் கடந்த வருடமே பேசப்பட்டு வந்த ஆச்சர்யமான நிகழ்வு. கேள்விப்பட்டு அனைவருக்கும் ஹார்ட் அட்டாக் வராத குறைதான். அப்போதைக்கு அது யாருடைய படம் என்கிற விபரங்களை அவர் சொல்ல மறுத்துவிட்டார்.


ஆனால் இப்போது அவருடன் மலையாள படம் ஒன்றில் நடித்துவரும் காமெடி நடிகரான அஜூ வர்கீஸ், பேச்சுவாக்கில் அந்தப்படம் பற்றிய விபரங்களை கறந்து, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தகவல்கள் உண்மையில் பிரமிகத்தான் வைக்கின்றன.. ஆம்.. ஆஸ்கர் விருதுகளை அள்ளிய நமது ஸ்டீவன்ஸ்பீல்பெர்க் டைரக்சனில் ஹாலிவுட் சூப்பர் நடிகர்களில் ஒருவரான டாம் குரூஸுடன் இணைந்து முக்கியமான வேடத்தில் நடித்துள்ளாராம்.


2009ல் மம்முட்டி நடித்த 'பாலேறி மாணிக்கம்' படம் மூலம் அறிமுகமான இந்த சசி கலிங்கா, அதன்பின் சிறிதும் பெரிதுமாக கிட்டத்தட்ட 30 படங்கள் வரை நடித்துவிட்டார் இரண்டு வருடங்களுக்கு முன் இயக்குனர் கமல் டைரக்சனில் 'கடம்மா' என்கிற படத்தில் நடிப்பதற்காக துபாய் சென்றிருந்தபோது ஏதேச்சையாக அங்குள்ள ரெஸ்டாரன்ட்டில் இவரை ஒரு நபர் சந்தித்து பேசினாராம்.. அப்படி வந்ததுதான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு. இன்னொரு முக்கியமான விஷயம் இவர் தங்கி இருந்த ஹோட்டலின் மொட்டை மாடியில் இருந்து, இவரை ஹெலிகாப்டரில் பிக்கப் பண்ணி, தினசரி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்துச்சென்று வந்ததுதானாம

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in