மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
மெரினாவில் தொடங்கி ரஜினி முருகன் வரை வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு திரியும் இளைஞனாக நடித்து வந்த சிவகார்த்திகேயன், அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக நடித்திருக்கும் படம்தான் ரெமோ. இந்த படத்திலும் அவர் காதலுக்காகத்தான் லேடி கெட்டப்புக்கு மாறுவதாக செய்திகள் கசிந்துள்ளன. அதேசமயம், ஏதோ நடித்தோம் என்றில்லாமல் அதையே தெளிவாகவும், அழுத்தமாகவும் செய்திருக்கிறார்.
கதைப்படி தான் நடித்துள்ள நர்ஸ் அக்கா வேடத்துக்காக ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மேக்கப் போட்டு, காஸ்டியூம் அணிந்து பக்கா லேடியாகவே தனது உடல்மொழியை மாற்றி நடித்துள்ள சிவகார்த்திகேயன், டப்பிங்கிலும் லேடி வாய்சில் தானே பேசியிருக்கிறார். இப்படி அவர் அதிகமான உழைப்பை கொடுத்து நடித்துள்ள அந்த நர்ஸ் வேடத்துக்கு ஒரு பில்டப் பாடலும் இடம் பெற்றுள்ளதாம்.
அந்த பாடலுக்காக ஏராளமான டியூன்களை போட்டாராம் அனிருத். அதில் இருந்து ஒரு டியூனை ஓகே செய்தாராம் சிவகார்த்திகேயன். அந்த பாடல் மீசை பியூட்டி என்று தொடங்கும் இந்த பாடலில் அந்த லேடி கெட்டப்பை வர்ணிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளதாம். இந்த பாடலின் சிங்கிள் ட்ரேக் விரைவில் வெளியிடப்பட உள்ளதாம். ஏற்கனவே வெளியான செஞ்சிட்டாளே பாடல் ரசிகர் களிடம் பெரிய அளவில் ரீச்சாகியிருப்பதை அடுத்து இந்த மீசை பியூட்டி பாட லும் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கிறாராம் சிவகார்த்திகேயன்.