'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பெங்காலி மொழியில் பல படங்களில் நடித்தவர் பாப்ரிகோஷ். விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நாயகனாக நடித்த டூரிங் டாக்கீஸ் படத்தில் நாயகியாக நடித்த அவர், அதன்பிறகு ஓய் படத்திலும் நாயகியாக நடித்தார். தற்போது விஜய் நடிக்கும் 60வது படத்தில் மூன்று ஹீரோயினிகளில் ஒருவராக நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு விஜய்யுடன் ஒரு அதிரடி பாடல் மற்றும் பல காட்சிகளும் உள்ளது. அதனால் இந்த படத்திற்கு பிறகு தனது கோலிவுட் மார்க்கெட் சூடுபிடித்து விடும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார் பாப்ரி கோஷ்.
இந்நிலையில், விஜய் படத்தில் நடித்து முடித்து விட்டு ஒரு பெங்காலி படத்தில் நடித்து வரும் அவர், அந்த படத்திற்காக ஜாம்பி நடன ஒத்திகை பார்த்தபோது தவறி கீழே விழுந்து விட்டாராம். அதில் அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தாராம் பாப்ரி கோஷ். அதையடுத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை, 2 வாரங்களுக்கு முழு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம்.