Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரேர் பீஸ் ஆனார் நட்ராஜ்

28 ஆக, 2016 - 13:59 IST
எழுத்தின் அளவு:
nati-is-now-busy-in-movie-with-his-different-jonour-of-movies

ஒளிப்பதிவாளராக இருந்து நடிகர் ஆனவர் நட்டி என்கிற நட்ராஜ். பாலிவுட்டிலும் புகழ்பெற்ற நட்ராஜ் தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆசைகொண்டு நாளை என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு சக்கரவியூகம் படத்தில் நடித்தார். அவர் நடித்த மிளகா படம் அவரை ஓரளவுக்கு அடையாளம் காட்டியது. சதுரங்க வேட்டை படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகராக்கியது. தற்போது அவர் நடித்துள்ள போங்கு படம் வெளிவர இருக்கிறது.


நடிகர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் பட்டம் போட்டுக் கொள்வது சமீபகாலமாக இல்லாமல் இருந்தது. ஆனால் மீண்டும் அது தலைகாட்டத் தொடங்கி உள்ளது. விஜய் சேதுபதிக்கு அ வரை அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமி மக்கள் செல்வன் பட்டத்தை கொடுத்தார். அதைத்தான் அவரும் பயன்படுத்தி வருகிறார். தற்போது நட்ராஜுக்கு ரேர் பீஸ் என்ற பட்டத்தை கொடுத்திருக்கிறார்கள். போங்கு பட புரமோசன்களில் ரேர் பீஸ் நட்டி என்றே விளம்பரம் செய்கிறார்கள்.


"எனக்கு பட்டம் போட்டுக் கொள்வதில் விருப்பம் இல்லை. அந்த அளவிற்கு நான் இன்னும் சாதிக்கவும் இல்லை. என்றாலும் நண்பர்கள் அன்பாக செய்யும்போது அதனை தவிர்க்க முடியவில்லை" என்கிறார் நட்ராஜ். சாரி... ரேர் பீஸ் நட்டி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in