பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோயின்களில் சோனாக்ஷி சின்ஹாவும் ஒருவர். சோனாக்ஷி தற்போது நடித்து வரும் படம் " அகிரா ".சோனாக்ஷி இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். இதனிடையே நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சோனாக்ஷியிடம் உங்களுக்கு அரசியலுக்கு வர ஆர்வம் இருக்கிறதா ? என்று கேட்டனர்.
இதைப்பற்றி சோனாக்ஷி கூறியதாவது..." எனக்கு அரசியலுக்கு வர ஆர்வம் இல்லை. அரசியலுக்கு வருவதற்கு எனக்கு தகுதியும் இல்லை. என் தந்தை அரசியலில் இருப்பதால் நானும் இருக்க வேண்டுமா. நான் அரசியலுக்கு சரிப்பட்டு வர மாட்டேன் " என்று கூறினார்.
சோனாக்ஷி தற்போது நடித்து வரும் அகிரா படம் இந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது.