‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விஜய் நடித்து வரும் 60-வது படத்தின் படப்பிடிப்பு உள்ளாடு - வெளிநாடு என்று பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஆரம்பத்தில் விஜய்யுடன் ஜெகபதிபாபு, டேனியேல் பாலாஜி, மைம் கோபி ஆகியோர் மோதிக்கொள்ளும் சண்டை காட்சிகளை சென்னையிலுள்ள பின்னி மில்லில் படமாக்கி வந்தனர். அதன்பிறகு சென்னை மற்றும் வெளிநாடுகளில் கீர்த்திசுரேஷ், அபர்ணா வினோத், பாப்ரிகோஷ் போன்ற நடிகைகள் சம்பந்தப்பட்ட பெருவாரியான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்போது விஜய்யுடன், நான் கடவுள் ராஜேந்திரன், சதீஷ் போன்ற நடிகர்கள் இணைந்து நடிக்கும் காமெடி காட்சிகள் படமாக்கப்படுகிறது. இதற்காக இன்று முதல் இன்னும் ஒரு வாரத்திற்கு படக்குழுவுடன் பொள்ளாச்சியில் முகாமிடுகிறார் விஜய். அங்கு அனைத்து காமெடி காட்சிகளும் படமாக்கப் பட்ட பிறகு மீண்டும் சென்னைக்கு வந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடர் கிறார்களாம்.