தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2003ல் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் சாமி. சூப்பர் ஹிட்டான அந்த படத்தை கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த வகையில், விக்ரம்-ஹரி ஆகிய இருவரின் கேரியரிலும் சாமி முக்கிய படமாக அமைந்தது. அந்த படத்தில் நாயகியாக திரிஷா நடித்திருந்தார். அதன்பிறகு அருண் படத்தில் இணைந்த விக்ரம்-ஹரி கூட்டணி இப்போது மீண்டும் சாமி-2வில் இணைகிறார்கள். தற்போது சிங்கம் -3 படத்தை இயக்கி வரும் ஹரி அந்த பட வேலைகள் முடிந்ததும் சாமி-2 பட வேலைகளில் இறங்குகிறார்.
மேலும், சாமி-2 வில் விக்ரமுக்கு ஜோடியாக மீண்டும் திரிஷா நடிப்பாரா? என்பது போன்ற கேள்விகளும் தற்போது எழுந்திருக்கிறது. ஆனால் இதுபற்றி டைரக்டர் ஹரி தரப்பில் விசாரித்தபோது, இந்த படத்தில் திரிஷா இருக்கிறார். ஆனால் அவர் நாயகியா? அல்லது வேறு கேரக்டரில் நடிக்கிறாரா? என்பது சஸ்பென்ஸ் என்கிறார்கள். அதோடு, இன்னொரு முன்னணி நடிகையும் சாமி-2யில் இருக்கிறாராம். அது நயன்தாராவாக இருக்கலாம் என்று ஏற்கனவே செய்தி வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.