ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சுராஜ் இயக்கத்தில், விஷால், தமன்னா ஜோடியாக நடிக்கும் படம் 'கத்திசண்டை'. 'ரோமியோ ஜுலியட்', விரைவில் ரிலிசாகவிருக்கிற 'வீரசிவாஜி' ஆகிய படங்களை தயாரித்த 'மெட்ராஸ் என்டர்பிரைசஸ்' நிறுவனம் சார்பில் நந்தகோபால் தயாரிக்கும் 'கத்திசண்டை' படம் தீபாவளிக்கு ரிலீசாக திரைக்கு வரவிருக்கிறது. எனவே இப்படத்தின் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
'ஹிப் பாப் தமிழா' ஆதி இசை அமைக்கும் இப்படத்தின் சிங்கிள் டிராக்கை விஷாலின் பிறந்த தினமான ஆகஸ்ட் 29 -ஆம் தேதியன்று வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தில் வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
விஷாலுடன் தமன்னா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடிப்பதால் தமன்னாவை வைத்து கத்தி சண்டை படத்தின் புரமோஷனை நடத்த திட்டமிட்டார் தயாரிப்பாளர். கத்தி சண்டை படத்தின் ஆடியோ வெளியீட்டை சாக்காக வைத்து தமன்னாவை அழைத்திருக்கிறார்கள். தமன்னாவோ நயன்தாரா பாணியில் புரமோஷனுக்கு வர மாட்டேன் என்று சொல்கிறாராம்.
விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தின் சக்சஸ்மீட்டுக்கு அழைத்தபோதும் அதற்கு தனி சம்பளம் கேட்டிருக்கிறார். அதனாலேயே சக்சஸ் மீட்டை கேன்சல் செய்துவிட்டார் தயாரிப்பாளர்.