ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
'யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டீகே இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கவலை வேண்டாம்'. இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இந்த டீசரை நடிகர் தனுஷ் வெளியிட உள்ளார். ஏற்கெனவே, ஜீவாவுக்கும் தனுஷுக்கும் ஆகாத நிலையில் தற்போது ஜீவா பட டீசரை தனுஷ் வெளியிடுவது பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேருக்குமே ஏற்கெனவே, முட்டல்கள் மோதல்கள் உண்டு.
ஜீவாவை சில சமயங்களில் கிண்டலடித்து தனுஷ் பேசியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதோடு, 'வட சென்னை' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டதற்கு ஜீவா மறுத்துவிட்டார் என்றும் சொன்னார்கள்.
இதனிடையே, இன்று தனுஷ் 'கவலை வேண்டாம்' டீசரை வெளியிட உள்ளார் என படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இப்போதெல்லாம் டீசர் வெளியீடு, சிங்கிள் டிராக் வெளியீடு ஆகியவற்றை சமூக வலைத்தளங்களிலேயே வெளியிட்டு விடுகிறார்கள். அந்த வரிசையில் இன்று இந்த டீசர் வெளியீடும் நடைபெற உள்ளது. 'கவலை வேண்டாம்' படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது.