தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, ‛குவாண்டிகோ' எனும் அமெரிக்க சீரியலுக்கு பின்னர் ஹாலிவுட் நடிகையாகிவிட்டார். தற்போது ‛பேவாட்ச்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகையாக மட்டுமல்லாது நன்கு பாடும் திறன் உடையவரான பிரியங்கா, தற்போது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். அவர், மராத்திய மொழியில் முதன்முறையாக ‛வென்டிலேட்டர்' என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் ஒன்றை பிரியங்கா சோப்ரா பாட இருக்கிறார். இந்தப்பாடல் மராத்தி மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் கலந்த பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஹாலிவுட் சீரியல் மற்றும் ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்காவில் இருக்கும் பிரியங்கா, மும்பை திரும்பியவுடன் வென்டிலேட்டர் படத்தில் பாடுவார் என தெரிகிறது.