பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் குயினான கங்கனா ரணாவத், சஞ்சய் லீலா பன்சாலி படத்தில், நடிகர் ஷாரூக்கான் உடன் நடிக்க இருப்பதாக சில தினங்களாக செய்திகள் வந்தன. இந்நிலையில் கங்கனா, தான் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா, சஞ்சய் படத்தில் நடிப்பது பற்றி கூறியிருப்பதாவது... ‛‛சஞ்சய் சார் என்னிடம், நானும், ஷாரூக்கான் இணைந்து நடிக்க வேண்டும் என்று கூறினார். நான் இதுவரை ஷாரூக்கான் உடன் நடித்தது இல்லை. இதையடுத்து உடனடியாக இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்'' என்று கூறியுள்ளார்.
கங்கனா, தற்போது ‛ரங்கூன்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.