'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியத் திரையுலகத்தில் கிளாமர் மற்றும் நடிப்பில் சிறந்த நடிகை எனப் பெயரெடுத்துள்ளவர் தீபிகா படுகோனே. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஓம் சாந்தி ஓம் என்ற படத்தின் மூலம் 2007ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்ததால் மிகப் பிரபலமான நடிகைகள் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
எக்ஸ்எக்ஸ்எக்ஸ்-ரிட்டர்ன் ஆப் த ஸன்டர் கேஜ் என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார் தீபிகா. இந்தப் படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாக உள்ளது.
பிரபல போர்ப்ஸ் பத்திரிகை அதிக அளவில் வருமானத்தை ஈட்டும் உலகின் டாப் 10 நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 10 மில்லியன் யுஎஸ் டாலர்கள் பெற்று தீபிகா படுகோனே 10வது இடத்தைப் பிடித்துள்ளார். ஹாலிவுட் நடிகையான ஜெனிஃபர் லாரன்ஸ் 46 மில்லியன் யுஎஸ் டாலர்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார். சீன நடிகையான பேன் பின்க்பின்க் 17 மில்லியன் யுஎஸ் டாலர்கள் பெற்று 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தீபிகா நடித்துள்ள சில ஹிந்தித் திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளன. திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் மாடலிங், பெரிய நிகழ்வுகளில் கலந்து கொள்வது என பல வகைகளில் சம்பளம் பெறுவதில் இந்திய அளவில் ஏற்கெனவே தீபிகா படுகோனே தான் முதலிடத்தில் உள்ளார். தற்போது உலக அளவில் அவர் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்திருப்பது மிகப் பெரிய விஷயம்.
போர்ப்ஸ் வெளியிட்ட டாப் 10 நடிகைகளின் விபரம்...
1. ஜெனிபர் லாரன்ஸ் - 46 மில்லியன் யுஎஸ் டாலர்
2. மெலிசா மெக்கர்த்தி - 33 மில்லியன் யுஎஸ் டாலர்
3. ஸ்கார்லெட் ஜான்சன் - 25 மில்லியன் யுஎஸ் டாலர்
4. ஜெனிபர் அனிஸ்டன் - 21 மில்லியன் யுஎஸ் டாலர்
5. பேன் பிங்பிங் - 17 மில்லியன் யுஎஸ் டாலர்
6. சார்லிஸ் தெரோன் - 16.5 மில்லியன் யுஎஸ் டாலர்
7. எமி ஆடம்ஸ் - 13.5 மில்லியன் யுஎஸ் டாலர்
8. ஜூலியா ராபர்ட்ஸ் - 12 மில்லியன் யுஎஸ் டாலர்
9. மிலா குனிஸ் - 11 மில்லியன் யுஎஸ் டாலர்
10. தீபிகா படுகோனே - 10 மில்லியன் யுஎஸ் டாலர்