'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
திரிஷா, நயன்தாரா இரண்டு பேரும் போட்டி போட்டு படங்களை கைப்பற்றி வந்த நேரம், நமீதாவும் என்ட்ரி கொடுத்து தனது பங்குக்கு சில முன்னணி நடி கர்களின் படங்களை கைப்பற்றி அவர்கள் இருவருக்கும் பலத்த அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் ஒருகட்டத்தில் நமீதாவின் உடம்பு பெருத்து விட, அவரது மார்க்கெட் சரிந்தது. இருப்பினும், சில வருட இடைவெளிக்குப்பிறகு மறுபடியும் ஸ்லிம்மாக உடம்பை மாற்றி தற்போது பொட்டு படத்தில் மந்திரவாதியாக நடித்து வருகிறார் நமீதா.
இந்த நிலையில், எழுத்தாளர் பாலகுமார் என்பவர் இயக்கும் பொம்பள -என்ற படத்தில் நயன்தாரா லீடு ரோலில் நடிக்க, அதே படத்தில் இன்னொரு நாயகியாக நமீதாவும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதற்கு முன்பு கிளாமர் கதாபாத்திரங்களுக்கே பயன்படுத்தப்பட்டு வந்த நமீதாவுக்கு இந்த படத்தில் பர்பாமென்ஸ் வேடமாம். என்னதான் நயன்தாராவை சுற்றியே கதை இருந்தபோதும் தனக்கான கேரக்டரும் கதையோடு கலந்தது என்பதால் இந்த படத்தில் முதன்முறையாக நடிப்பு போட்டியில் இறங்கி நல்ல நடிகை என்கிற பெயரை எடுத்து விட வேண் டும் என்று தயாராகிக்கொண்டிருக்கிறார் நமீதா.