பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மலையாள,'டிவி' சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நிகிலா விமலுக்கு, கோலிவுட் தான், சிவப்பு கம்பளம் விரித்தது. சசிகுமார் ஜோடியாக, வெற்றிவேல் படத்தில், மிக அமைதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்த நிகிலாவுக்கு, இப்போது, வாய்ப்புகள் வரிசை கட்டி காத்திருக்கின்றன. சசிகுமாருடன் மீண்டும், கிடாரி படத்துக்காக ஜோடி சேர்ந்துள்ளார் அவர். இதுதவிர, பஞ்சு மிட்டாய், ஒன்பது குழி சம்பத் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். 'எனக்கு பரதநாட்டியம், குச்சுப்பிடி, கதகளி போன்ற நடனங்கள் நன்றாக ஆடத் தெரியும்' என்கிறார். 'உங்கள் முகத்துக்கு, கிளாமர் கேரக்டர் பொருத்தமாக இருக்காதே' என, கேட்டால், 'அதெல்லாம் பொருந்தும்; பொறுத்திருந்து பாருங்கள்' என்கிறார் நிகிலா.