மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நாயகனாக நடித்த சரித்திரப் படமான 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படம் 2006ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. சரித்திரப் படத்தையே நகைச்சுவைப் படமாக எடுத்து தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு படமாக சிம்புதேவன், வடிவேலு கூட்டணி கொடுத்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்தப் படத்தை வெகுவாக ரசித்தனர். வடிவேலுவின் நகைச்சுவைப் படங்களிலேயே அந்தப் படம் ஒரு 'மாஸ்டர் பீஸ்' ஆக அமைந்தது. அதன்பின் வடிவேலு நாயகனாக நடித்த படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. அனைத்துமே தோல்விப் படங்களாகவே அமைந்தன.
வடிவேலுவும் தன்னுடைய நாயகன் கொள்கையைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டு நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும் நடிக்க முடிவெடுத்தார். விஷால், தமன்னா நடிக்கும் 'கத்திச் சண்டை' படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதே வடிவேலுவின் நகைச்சுவையைப் பார்த்து அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து வருகிறார்களாம். வடிவேலுவின் நகைச்சுவை ராஜ்ஜியம் இந்தப் படம் மூலம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள்.
இதனிடையே, வடிவேலு நாயகனாக நடிக்க உள்ள 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறதாம். படத்திற்கான தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்துவிட்டதாகவும், வடிவேலுவின் ஜோடியாக நடிக்கும் நடிகையைத் தேர்வு செய்துவிட்டால் படப்பிடிப்புக்கு கிளம்பத் தயாராகிவிடுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ், மற்றும் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்க உள்ளதாகத் தெரிகிறது.