சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
விஜய் தற்போது நடித்து வரும் படத்திற்கு 'எங்க வீட்டுப் பிள்ளை' என பெயர் வைக்கப்படுவதாக கடந்த சில வாரங்களாகவே பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. அதேசமயம் எம்ஜிஆர் ரசிகர்கள் அந்தப் பெயரை விஜய் படத்திற்கு வைக்கக் கூடாது என கண்டிப்புடன் கூறியதாலும் தயாரிப்பு நிறுவனமே எங்களது படத்திற்கு அப்படி ஒரு பெயர் வைக்கவில்லை என அறிவித்தனர். படத்தின் டைட்டில் பற்றி நாங்களே அறிவிக்கிறோம் என்று சொன்னார்கள். இருந்தாலும் இதுவரை படத்தின் டைட்டில் என்ன என்பதை அவர்கள் அறிவிக்கவில்லை.
இதனிடையே படத்தின் தலைப்பை 'உங்க வீட்டுப் பிள்ளை' என வைக்கப் போவதாக தற்போது புதிய தகவல் ஒன்று கோலிவுட்டில் பரவி வருகிறது. ஆனால், 1984ம் ஆண்டு பிரபு, பூர்ணிமா ஜெயராம் நடித்த 'உங்க வீட்டுப் பிள்ளை' என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்துள்ளது. அதோடு 2010ம் ஆண்டில் புதுமுகங்கள் விஷ்ணுசரன், ஆஷிதா, சுரபி ஆகிய புதுமுகங்கள் நடிக்க 'உங்க வீட்டுப் பிள்ளை' என்ற பெயரில் மீண்டும் ஒரு படம் தயாரானது. அந்தப் படம் வெளிவந்ததாக இதுவரை தகவல் இல்லை.
இப்போது விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு ஏற்கெனவே வந்த 'உங்க வீட்டுப் பிள்ளை' என்ற தலைப்பை வைப்பார்களா என்பது கேள்விக்குறிதான். அதிலும் அந்தப் பெயரெல்லாம் அந்தக் காலப் பெயர்கள். இந்தக் காலத்திற்கேற்ப புதிய தலைப்பை வைக்காமல் அப்படிப்பட்ட பழைய பெயர்களைத் தேர்வு செய்ய மாட்டார்கள் என்றும் சிலர் சொல்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் சீக்கிரமே பெயரை அறிவித்தால் நல்லது.