பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'காக்கா முட்டை' படத்துக்கு முன் மணிகண்டன் இயக்கிய முதல் படம் 'குற்றமே தண்டனை'. விதார்த் தயாரித்து கதாநாயகனாக நடித்த இந்தப் படம் தாமதமானதால் காக்கா முட்டை படத்தை இயக்கி அதன் மூலம் புகழ் பெற்றார். இயக்குனர் மணிகண்டன் இயக்கிய முதல் படமான 'குற்றமே தண்டனை' அவரது இரண்டாவது படமாக விரைவில் ரிலீசாகவிருக்கிறது. ஆகஸ்ட் 25 அன்று வெளிவருவதாக சொல்லப்பட்ட இந்தப் படம் தற்போது அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 23 அன்று இப்படத்துக்கு ரிலீஸ் தேதி குறித்திருக்கிறார்கள்.
அதே தேதியில் விஜய்சேதுபதி, ரித்திகா சிங் நடிப்பில் மணிகண்டன் இயக்கியுள்ள 'ஆண்டவன் கட்டளை' படத்தின் ரிலிஸ் தேதியும் குறிக்கப்பட்டுள்ளது. ஒரே இயக்குநரின் இரண்டு படங்கள் ஒரே தேதியில் வெளிவருவது அபூர்வமான விஷயம்தான். அந்த பெருமை மணிகண்டனுக்கு கிடைக்குமா? அல்லது இரண்டில் ஒரு படம் வேறு தேதிக்கு மாற்றப்படுமா? என்பது தெரியவில்லை.
இதற்கிடையில் மணிகண்டன் அடுத்த இயக்கவிருக்கும் படத்தின் தகவல்களும் வெளியாகியுள்ளன. 'கடைசி விவசாயி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் 70 வயது முதியவர் ஒருவரை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறாராம். இது கமர்ஷியல் சினிமா அல்லவாம். முழுக்க முழுக்க அவார்டுக்காக எடுக்கப்படும் படமாம்.