ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் இருக்கும் இளம் ஹீரோயின்களில் சோனம் கபூரும் ஒருவர். தற்போது பாலிவுட்டில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து அதிக படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் பி டி உஷாவின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக எடுக்க வேண்டும் என்று சோனம் கபூர் கூறியுள்ளார்.
இதைபற்றி சோனம் கபூர் மேலும் கூறியதாவது...." நான் இதற்கு முன் விமானப்பணிப்பெண் நீர்ஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து உள்ளேன். தற்போது பெண் விளையாட்டு வீரர்கள் பற்றி படம் எடுத்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன். குறிப்பாக ஓட்டப்பந்தயத்தில் சிறந்து விளங்கிய பி.டி உஷாவின் சுயசரிதையை படமாக எடுக்க வேண்டும். ஏற்கனவே மில்கா சிங் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டது. இதுப்போன்று படங்கள் எடுப்பதால் விளையாட்டு வீரர்கள் ஆர்வமாக விளையாடுவார்கள். நமது நாட்டில் நிறைய விளையாட்டு வீரர்கள் உள்ளனர் அவர்களை பற்றியும் படம் எடுக்க வேண்டும் " என்றார்.