வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தவறி விழுந்ததில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். விஜய்யை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி, அவரை இந்தளவுக்கு உயர்த்தியவர் அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தான். சமுதாயம் சார்ந்த பிரச்னைகளை கையிலெடுத்து அதை படமாக கொடுத்து வெற்றி பெற்றவர் சந்திரசேகர். சட்டம் ஒரு இருட்டறை, நெஞ்சுக்கு ஓர் நீதி, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் நைய்யப்புடை என்ற படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்தார்.
இந்நிலையில், கேரள மாநிலம் சென்றிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், குமரகம் பகுதியில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். அங்கு அவர் தவறி விழுந்ததில் காயமடைந்தார். இதையடுத்து உடனடியாக கோட்டயத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எஸ்ஏசி. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் லேசான காயம் தான் என்றும், சில தினங்களில் சரியாகிவிடும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான்கு நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப உள்ளார்.