இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜோக்கர் படத்தில் தன் அழகை குறைத்து அசல் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து காட்டியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. வாய்ப்புகளும் தேடி வருகிறது. ஆனால் ஜோக்கர் காயத்ரியின் முதல் படம் அல்ல. விஜய் சேதுபதி தயாரிப்பில் லெனின் பாரதி இயக்கும் மேற்கு தொடர்ச்சி மலைதான் அவரது முதல் படம். இந்த படத்தின் போட்டோக்களை பார்த்துவிட்டுதான் ராஜு முருகன் ஜோக்கர் படத்துக்கு இவரை தேர்வு செய்தார்.
எண்ணெய் இல்லாத தலைடி, அழுக்கான உடைகள், மஞ்சள் பூத்த பற்கள் இதுதான் உங்கள் தோற்றம், என்று முன்பே சொல்லப்பட்டு அதற்கு ஓகே சொல்லி நடித்தார். ஆனால் இதைவிட கஷ்டப்பட்டு நடித்தது மேற்கு தொடர்ச்சி மலையில்தான் என்கிறார் காயத்ரி.
அவர் கூறியிருப்பதாவது: மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் உள்ள சதுரங்கபாறை என்ற இடத்தில் நடந்தது. கடுமையான வெயில் நேரத்திலும், கடுமையான மழை நேரத்திலும் படப்பிடிப்பு நடந்தது. எந்த பக்கத்தில் இருந்து எந்த மிருகம் தாக்குமோ என்ற பயத்துடனேயே நடித்தேன்.
ஜோக்கருக்கும் கடுமையாக உழைத்தேன். ஒரு கிராமத்தில் தங்கியிருந்து நடித்தேன். உழைப்புக்கான பதில் இப்போது வந்து கொண்டிருக்கிறது. கிளாமராக நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். கிளாமருக்கு நான் எதிரியல்ல. எனக்கு அது செட்டாகாது அவ்வளவுதான். அடிப்படையில் நான் டான்சர். நடிப்பிலும், நடனத்திலும் ஷோபனா மேடம் மாதிரி ஆகணுங்றதுதான் என்னோட ஆசை. என்கிறார் காயத்ரி.