கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
காக்கா முட்டை மணிகண்டன் தற்போது விதார்த் நடிக்கும் குற்றமே தண்டனை, விஜய்சேதுபதி நடிக்கும் ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கி உள்ளார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளிவரத் தயாராக இருக்கிறது. இந்த நிலையில் அவர் அடுத்ததாக கடைசி விவசாயி என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதனை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் இதன் படப்பிடிப்பு துவங்கும். இதில் 70 வயது விவசாயிதான் ஹீரோ. அந்த கேரக்டரில் நடிப்பதற்கு தகுதியான நபரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து ஈராஸ் இண்டர் நேஷனல் நிறுவன இயக்குனர் சாகர் சத்வானி கூறியதாவது: ஒருபுறம் கோலா தொழிற்சாலைகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் நம் நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டு இருக்க, மறுபுறம் விவசாயி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து கொண்டே போகிறது. நம்முடைய அன்றாட வாழக்கைக்கு தேவையான உணவை வழங்கும் விவசாயிகள் தற்போது வாழ்க்கையிலும் சரி, விவசாயத்திலும் சரி, சரிந்து கொண்டே போகிறார்கள். கடைசி விவசாயி படத்தின் கதையை இயக்குனர் மணிகண்டன் எங்களிடம் சொன்ன அடுத்த கணமே, இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம்.
சமுதாய அக்கறையோடு உருவாக இருக்கும் இந்த கடைசி விவசாயி படத்தில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற காமெடி, காதல் என பல சிறப்பம்சங்களையும் நாங்கள் சேர்க்க இருக்கிறோம். எனவே கடைசி விவசாயி படமானது அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பக் கூடியதாக இருக்கும். சட்டத்தின் சிக்கலான விதி முறைகளால் குழம்பி போன ஒரு சராசரி விவசாயி, எப்படி அந்த சிக்கல்களை புரிந்து கொண்டு அதில் இருந்து வெளியே வருகிறார் என்பது தான் கதை கரு. நம்முடைய பசியை போக்க தங்களின் வியர்வையை சிந்தும் விவசாயிகளுக்கு இந்தப்படம் ஒரு சமர்ப்பணம். என்கிறார் சாகர் சத்வானி.