'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
ஹிந்தி திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் சோனாக்ஷி சின்ஹாவும் ஒருவர். தற்போது இயக்குநர் எ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி நடித்து வரும் படம் அகிரா. இந்தப்படம் தமிழில் வெளிவந்த மௌன குரு படத்தின் ரீமேக்காகும். தற்போது அகிரா புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் சோனாக்ஷி . தனக்கு எந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை என்பதை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் சோனாக்ஷி கூறியதாவது "நான் விளையாட்டை மையப்படுத்தி வரும் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். நான் என் பள்ளி, கல்லுரி பருவத்தில் விளையாட்டுகளில் ஆர்வத்துடன் விளையாடுவேன். கைப்பந்து, கூடைப்பந்து, நீச்சல், குண்டெறிதல், போன்ற விளையாட்டுகளில் நான் மிகவும் நன்றாக விளையாடுவேன். அதனால் எனக்கு அவ்வாறு நடிக்க ஒரு வாய்ப்பு கிடைதால் கண்டிப்பாக நடிப்பேன் "என்றார்.
அகிரா படம் இந்த வருடம் செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளனர்