Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நெகட்டீவ் ரோலில் நடிக்க ஆசைப்படும் ஜாக்குலின் பெர்ணான்டஸ்

22 ஆக, 2016 - 15:42 IST
எழுத்தின் அளவு:
I-want-to-do-Negative-Role--Jacqueline-Fernandez

‛‛ஹவுஸ்புல்-3'', ‛‛டிஸ்யும்'' படங்களின் தொடர் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ். இந்த உற்சாகத்துடன் தனது அடுத்தப்படமான ‛பிளையிங் ஜாட்' படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் ஜாக்குலின். இப்படம் பற்றியும், இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி நம்மோட அவர் பகிர்ந்து கொண்டதாவது...


பிளையிங் ஜாட் படத்தில் உங்க கேரக்டர் என்ன?


கிருத்தி எனும் ரோலில் சண்டிகரில் வாழும் பஞ்சாபி பெண்ணாக, ஆங்கிலம் சொல்லித் தரும் ஆசிரியையாக நான் நடிக்கிறேன். மிகவும் அன்பான, இனிமையான அப்பாவி பெண் ரோல் என்னுடையது. டைகர் ஷெரப், கராத்தே ஆசிரியராக நடிக்கிறார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் உண்டு. ‛பிளையிங் ஜாட்' வந்ததும் எங்கள் வாழ்க்கையில் திருப்பம் வருகிறது. அது என்ன என்பது தான் படத்தின் சுவாரஸ்யமான கதை.


பஞ்சாபி பெண்ணாக எப்படி நடித்தீர்கள்?


‛பிளையிங் ஜாட்' படத்தில் பஞ்சாபி பெண்ணாக நடித்தாலும் நான் கனடாவிலிருந்து வரும் பெண் தான். அதனால் நான் பஞ்சாப் மொழி பேச மாட்டேன். ஹிந்தி மட்டுமே பேசி நடிப்பேன். ஆனால் நான் பேசுவது பஞ்சாபி மொழி போன்று இருக்கும். இயற்கையாக அது அமைந்துவிட்டது.


சீனியர் நடிகர்கள், சமகாலத்து நடிகர்களுடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க.?


என்னுயை திரையுல வாழ்க்கை அமிதாப், சல்மான், அக்ஷ்ய் போன்ற சீனியர் நடிகர்களுடன் தான் ஆரம்பித்தது. சமீபத்தில் வருண் தவான், சித்தார்த் மல்கோத்ரா போன்று என்னுடைய சமகாலத்து நடிகர்களுடனும் நடித்தேன். சீனியர் நடிகர்களிடத்தில் நான் நிறைய கற்று கொண்டேன். அதேசமயம் இளம் நடிகர்களுடன் நடிக்க எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.


இயக்குநர் ரெமோ டிசோசாவுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி சொல்லுங்க?


ஒரே ஒரு இயக்குநருடன் நான் மீண்டும் மீண்டும் பணியாற்று வேண்டும் என்று நினைத்தால் அது ரெமோ டிசோசா ஒருவர் தான். ஏற்கனவே அவரின் ஜானே காஹா சே படத்தில் நடித்தேன். அப்போது முதல் மீண்டும் அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையிருந்தது. பிளையிங் ஜாட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்தப்படத்தில் நடித்தேன். இந்த நேரத்தில் இயக்குநர் ரெமோவுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நிஜத்தில் நான் என்ன கேரக்டரோ, அதையே இந்தப்படத்திலும் இயக்குநர் வழங்கியுள்ளார்.


எப்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பீர்கள்.?


ஒரு நடிகையாக நானும் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆசையிருக்கிறது. அதை எண்ணி வியப்பாக இருக்கிறேன். ஆனால் ஹாலிவுட் படங்கள் எல்லாம் நீண்ட நாட்களாக உருவாகும். இப்போதைக்கு பாலிவுட்டிலேயே நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறேன், அதுவே போதும், திருப்திகரமாக இருக்கிறது. என்னுடைய கவனம் எல்லாம் தற்சமயம் பாலிவுட்டில் மட்டும் தான்.


எந்தமாதிரியான கேரக்டரில் நடிக்க விரும்புகிறீர்கள்?


என்னுடைய அநேக படங்களில் அழகான, அப்பாவித்தனமான பெண்ணாகத்தான் நடித்திருக்கிறேன். ஆனால் இப்போது எனக்கு இரண்டு ஆசை உள்ளது. ஒன்று அடிதடி, ஆக்ஷ்ன் என சண்டைக்காட்சி உள்ள படத்தில் நடிக்க வேண்டும். மற்றொன்று நெகட்டீவ்வான வில்லன் ரோலில் நடிக்க ஆசை உள்ளது. ஒரு நடிகருக்கு ரொம்ப முக்கியமான விஷயம், வித்தியாசமான கேரக்டரில் நடிப்பது தான். ஏனென்றால் அப்போது தான் ரசிகர்கள் நம்மை ஏற்று கொள்வார்கள். ஆரம்பகாலத்தில் நானும் சினிமாவில் பெரிய நடிகர்களுடன் தான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது பெரிய நடிகர்கள் என்பதை விட நல்ல படங்களில் நடிக்கத்தான் ஆசைப்படுகிறேன்.


இவ்வாறு ஜாக்குலின் பெர்ணான்டஸ் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in