மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தலைப்பை பார்த்துவிட்டு எந்த டி.வி? எந்த நிகழ்ச்சி, எத்தனை மணிக்கு என்று ஆர்வமாக இருப்பீர்கள். ஷகிலா தொகுப்பாளினி ஆகியிருப்பது மலையாள சேனலான பிளவர்ஸ் டி.வியில்.
தமிழ் சேனல்களில் கலக்கபோவது யாரு, அசத்தப்போவது யாரு என்கிற நிகழ்ச்சி போன்று பிளவர்ஸ் டி.வியில் காமெடி சூப்பர் நைன்டி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் இரண்டாம் சீசனை தொகுத்து வழங்குகிறார் ஷகிலா. ஒரு காலத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லாலுக்கே சவால்விடும் வசூலை குவித்த ஷகிலா இப்போது மலையாளத்தில் தொகுப்பாளினி ஆகியிருப்பது நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.
இதில் ஷகிலா வெறும் நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டுமில்லாமல். இடையிடையே பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார். தன் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை வெளிப்படையாக பேசுகிறார். பார்வையாளர்களுடன் கொஞ்சி குலாவுகிறார், முத்தம் கொடுக்கிறார். தயாரிப்பில் இருக்கும் இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.