வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சிவாய் படத்தை தொடர்ந்து அஜய் தேவ்கன், ‛பாத்சாகோ' படத்தில் நடிக்கிறார். இவருடன் இம்ரான் ஹாஸ்மி, வித்யூத் ஜம்வால், இலியானா, இஷா குப்தா ஆகியோரும் முதன்மை ரோலில் நடிக்கிறார்கள். மிலன் லூதிரா இயக்குகிறார். இப்படத்தில் இடம்பெறும் குத்துப்பாட்டு ஒன்றுக்கு அஜய் மற்றும் இம்ரானுடன் இணைந்து ஆட இருக்கிறார் சன்னி லியோன்.
இதுகுறித்து இயக்குநர் மிலன் லூதிரா கூறுகையில், ‛‛சன்னி லியோன் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனமாடியிருக்கிறார். இப்போது அஜய் மற்றும் இம்ரான் இணைந்து ஆட இருக்கிறார். நிச்சயம் இந்தப்பாடல் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
பாத்சாகோ படம் 2017, மே மாதம் 12-ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருக்கிறது.