ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் திரையுலகில் சமீபகாலமாக சக நடிகர்களின் படங்களில் முன்னணி நடிகர்கள் சிலர் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்கள். ஆனால் காலம் காலமாக பாலிவுட்டில் இந்த கவுரவ கலாச்சாரம் பரவிக்கிடக்கிறது. இப்போதைக்கு பாலிவுட் பிரபல நட்சத்திரங்களான சல்மான்கான், அமிதாப், ஹேமமாலினி, ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் என்னென்ன கவுரவ வேடங்களில், யாருக்காக நடிக்கிறார்கள் தெரியுமா?
ஒரு காலத்தில் பாலிவுட்டின் கனவுக்கன்னியாக திகழ்ந்த ஹேமமாலினி இயக்கும் புதிய படமொன்றில், நடிகர் சல்மான் கான் கவுரவ வேடத்தில் தோன்றுகிறார். அமிதாப் பச்சன் நடித்த `பா படத்தை இயக்கிய டைரக்டர் பால்கியின் மனைவி கவுரி ஷிண்டே இயக்கிக் கொண்டிருக்கும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் கவுர வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பவர் நடிகை ஸ்ரீதேவி. நடிகர் ஷாரூக் கான் நடிக்கும் ரா 1 என்ற படத்தில், நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கு கிடைத்திருப்பதும் கவுரவ வேடம்தான். அமிதாப் பச்சன் நடிக்கும் புதிய படம் ஒன்றில் ஹேமமாலினி சிறப்பு தோற்றத்தில் வந்து போகிறார். சல்மான் கான் நடிக்கும் படத்தில் நட்புக்காக அவரது நண்பர்கள் சஞ்சய் தத், கரீஷ்மா கபூர் ஆகியோர் தோன்றியுள்ளனர். ஷாகித் கான் - தியா மிர்சா நடிக்கும் படம் ஒன்றில் ஷாரூக் கான் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.
நட்புக்காகவும், நன்றிக்காகவும் கவுரவ வேடம் ஏற்க சினிமா நட்சத்திரங்கள் ஆர்வம் காட்டுவது திரையுலகின் ஆரோக்யமான வளர்ச்சிக்கு ஒரு உதாரணம்தானே!