தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜனதா கேரேஜ் படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர் தனது ரசிகரும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவருமான நாகார்ஜூனாவைச் சந்தித்து பேசி அவரது ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த நாகார்ஜூனா ஜூனியர் என்.டி.ஆரின் தீவிர ரசிகராம், பெங்களூரில் புற்றுநோய் சிகிச்சை எடுத்து வரும் நாகார்ஜூனா ஜூனியர் என்.டி.ஆரைச் சந்திக்க வேண்டும் என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இத்தகவல் அறிந்த ஜூனியர் என்.டி.ஆர் அவரது இல்லத்திற்கே சென்று நாகார்ஜூனாவைச் சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார். அவரது குடும்பத்தினரையும் ஜூனியர் என்.டி.ஆர் சந்தித்து பேசியுள்ளார். படப்பிடிப்பிற்காக கேரளா செல்லும் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆர் நாகார்ஜூனாவைச் சந்தித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். செப்டம்பர் 2ல் திரைக்கு வரவிருக்கும் ஜனதா கேரேஜ் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது பிசியாகவுள்ளார்