பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஏ.எல் விஜய் தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் இயக்கும் படம் 'தேவி'. பிரபுதேவா தயாரித்து நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தமன்னான நடிக்கிறார். இவர்களுடன் சோனுசூட் வில்லனாக நடிக்கிறார். மூன்று மொழிக்கும் தனித்தனி இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள். தமிழுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இது ஒரு பேமிலி ஹாரர் படம். அமைதியே உருவான தமன்னாவுக்குள் ஒரு டெரர் பேய் இருப்பதுதான் கதை. வருகிற செப்டம்பர் 9ந் தேதி வெளிவருகிறது. அதற்கு முன்னதாக பாடல் வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜாக்கிசான் வெளியிட்டுள்ளார். வில்லன் சோனுசூட் 'குங்பூ யோகா' படத்தில் ஜாக்கிசானுடன் நடித்து வருகிறார். அந்த நட்பின் அடிப்படையில் ஜாக்கிசான் 'தேவி'யின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.