ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குத்துச்சண்டையை மையமாக வைத்து தமிழில் ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளது. 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி', 'மான் கராத்தே', 'பூலோகம்', 'இறுதிசுற்று' உள்பட பல படங்கள் குத்துச் சண்டையை மையமாக கொண்டது. இந்த நிலையில் இன்னுமொரு குத்துச் சண்டை படம் தயாராக இருக்கிறது. படத்தின் பெயரும் 'குத்துச்சண்டை' என்பதுதான்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து தலித் மக்களை அழைத்து வந்து வட சென்னையில் குடியமர்த்தினார்கள். அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு வேலை செய்தார்கள். அப்போதுதான் ஆங்கிலேயர்களிடமிருந்து கிரிக்கெட், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளை கற்றக் கொண்டார்கள் அதன் பிறகு இடியப்ப நாயக்கர் பரம்பரை, சர்பேட்டா பரம்பரை என இரண்டு பரம்பரையினர் குத்துச் சண்டையில் பிரபலமாக இருந்தார்கள். இவர்களுக்கிடையே அடிக்கடி மோதலும் நடக்கும். இதனை பின்னணியாக கொண்டு படம் தயாராகிறது. குத்துச்சண்டை வீரனாக நடிக்க பலம் உள்ள நடிகர்களை தேடிக் கொண்டிருக்கிறார் கோபி.