பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், பரத், கார்த்தி, விஷால் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து விட்டவர் காஜல்அகர்வால். குறிப்பாக, விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா என இரண்டு மெகா படங்களில் நடித்து விட்ட காஜல், இதுவரை அஜித்துடன் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. ஆனால் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் அவரது 57வது படத்தில் நாயகியாகி விட்டார் காஜல்அகர்வால்.
இந்த கேங்ஸ்டர் படத்தில் காஜல்அகர்வால் எந்தமாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பது சஸ்பென்சாக இருந்து வந்த நிலையில், தற்போது அவர் அப்படத்தில் அஜித்தின் மனைவியாக நடிப்பதாக கூறுகிறார்கள். அந்த வகையில் இதற்கு முந்தைய படங்களில் துள்ளலான காதல் நாயகியாக வலம் வந்த காஜல், முதன்முறையாக மனைவி வேடத்தில் நடிப்பதால் அழுத்தமான காட்சிகளில் நடிக்கிறாராம். அதோடு, அவரை அடக்க ஒடுக்கமான பெண்ணாகவும் காண்பிக்கப்போகிறாராம் சிவா. அந்த வகையில், அஜித்-காஜல்அகர்வாலுக்கு செண்டி மென்டுடன்கூடிய ரொமான்ஸ் பாடல் ஒன்றும் படத்தில் உள்ளதாம்.