வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா. பிரபுதேவா நாயகனாக நடித்த டபுள்ஸ் என்ற படத்தில் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதையடுத்து குத்து படத்தில் அவரது இசையில் உருவான போட்டுத்தாக்கு என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. பின்னர் ஜெயம்ரவி நாயகனாக நடித்த எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி படத்தின் மொத்த பாடல்களையுமே சூப்பர் ஹிட்டாக கொடுத்தார். தொடர்ந்து சிவகாசி, ஈ, ஜித்தன் என தொடர்ந்து பல படங்களில் ஹிட் பாடல்களாக கொடுத்து வந்தார் ஸ்ரீகாந்த்தேவா.
ஆனால் சமீபகாலமாக ஸ்ரீகாந்த்தேவா இசையில் வெளியாகும் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாவதில்லை. சமீபகாலமாக மெலோடி டியூன்களை குறைத்து விட்டு முழுக்க முழுக்க அதிரடி பாடல்களாக கொடுப்பதுதான் பெரிய ஹிட் கிடைக்கவில்லை என்று சில அபிமானிகள் அவரிடம் கருத்து கூறி வருகிறார்களாம். அதன்காரணமாக, இனிமேல் தனது ஆரம்ப காலத்தைப்போன்று மெலோடி கலந்த பாடல்களை அதிகமாக கொடுக்கப்போகிறாராம் ஸ்ரீகாந்த்தேவா. அதனால் அதற்கேற்ற கதைகள் மற்றும் மெலோடி டியூன்களை அதிகமாக விரும்பும் டைரக்டர்களின் படங்களுக்கு இசையமைப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டப்போகிறாராம் அவர்.